BREAKING NEWS

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி,சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு சிசி டிவி காட்சிகள்.

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து வேலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது அப்பொழுது குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்ற போது சென்னையில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த கார் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முன்பக்கம் சேதமடைந்தது காரில் இருந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சசிரேகா இருவரும் காயத்துடன் உயிர்தப்பினர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்க குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தற்போது காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS