BREAKING NEWS

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர்.

மேலும் அன்று மாலை 6.30 மணியளவில் பொதுமக்களுக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில், ரியல் எஸ்டேட் நகர விவசாய அணி அமைப்பாளர் பாண்டியன் முன்னிலையில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

விழாவில் கவுன்சிலர்கள் கவிதா பாபு, ஆட்டோ மோகன், 29 வது வார்டு செயலாளர் ஆனந்தன், நகர துணைச் செயலாளர் ஜம்புலிங்கம், 12வது வார்டு செயலாளர் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, 12 வது வார்டு புகழேந்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கிரிதரன், மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.

இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS