குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என கூறி மாணவ, மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்து, கைகளை பிடித்து இழுத்த இந்திய மாணவர் சங்கத்தினரை மீறி வகுப்புகளுக்கு மாணவ மாணவிகள் சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இன்று காலை முன் கூட்டியே கல்லூரிக்கு வந்த இந்திய மாணவர் சங்க அமைப்பினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி எவரையும் உள்ளே விடாமல் மறித்து நின்றனர்.
வகுப்புகளுக்கு செல்ல முற்பட்ட மாணவ, மாணவிகளை கைகளை பிடித்து இழுத்து தடுத்தனர்.
அப்போது அங்கு வந்த பேராசிரியர்கள் இந்திய மாணவர் சங்கத்தினரை எச்சரித்து வழி விடுமாறு அறிவுறுத்தினர்.
வகுப்புகளுக்கு செல்பவர்களை தடுக்க கூடாது என பேராசிரியர்களும், காவல் துறையினரும். ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறபடுத்தி மாணவிகளை வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரும்பான்மையான மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவிக்காமல் வகுப்புக்கு சென்றதால் . இருந்த சில மாணவ மாணவிகள் மட்டும் முழுக்கங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.