குண்டும் குழியுமான சாலைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாலை அமைக்கும் பணியை கிராம சாலை திட்டத்தின் கீழ் துவக்கம்
குண்டும் குழியுமான சாலைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாலை அமைக்கும் பணியை கிராம சாலை திட்டத்தின் கீழ் துவக்கி வைத்த எம்எல்ஏ உதயசூரியன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ,
சங்கராபுரம் மயிலாம்பாறை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து பொய்குணம் செல்லும் சாலை , பொய் குணம் நெடுமானூர் காட்டு கொட்டகை வழியாக சேஷச சமுத்திரம், செல்லும் சாலை, அரசம்பட்டு-பாவளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தார் சாலைகள் மிகவும் சிதிலமடைந்து பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்வதற்கும் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 12 கிலோமீட்டர் வரை உள்ள சாலைகளுக்கு சுமார் 9.3 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க பூமி பூஜையுடன் அதற்கான திட்டப் பணிகளை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இன்று துவக்கி வைத்தார. இந்நிகழ்வில் ஆவின் சேர்மன் ந ஆறுமுகம் ஒன்றிய பெருங்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை,தொழிலதிபர் ஆறு கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.