BREAKING NEWS

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நேற்று மாலை குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி கரகம் தலையில் சுமந்து அலங்கார காவடி,கூண்டு காவடி மற்றும் ஏராளமான பக்தர்கள் மேல வாத்தியங்கள் கேரள கெண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலில் வந்தடைந்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி தீக்குண்டம் முன்பு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த தீமிதி திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS