BREAKING NEWS

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று தர்மபுர ஆதீன 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி
திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில்  திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் திகழ்கிறது இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினம்தோறும் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.

ஏழாம் நாளான நேற்று அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் தர்மபுர ஆதீன 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது பின்னர் பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா காட்சி நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபட்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS