குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் ,வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் பழமை வாய்ந்த சௌந்தரநாயகி சமேத ருத்ரா பதியார் ஆலய 107 ஏழாம் ஆண்டு அமுதப் படையில் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது .
கடந்த ஏழாம் தேதி பால்குடம் எடுத்து, காவடி திருவிழா நடைபெற்றது. இன்று சீரளா தேவ பாலகன் கோவிலில் இருந்து திருத்தேருக்கு எழுந்தருளி முக்கிய விதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்குள் வந்து நிலையை அடைந்தது தொடர்ந்து ருத்ராபதிக்கும் ,சீராள தேவ பாலகனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் சிவனடியார்களிடம், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மடிப் பிச்சை ஏந்தி, அந்த உணவை உண்டால் குழந்தை பாக்கியம், நோயில்லா வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பதால், வாங்கி உண்டனர் , இதில் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை வாங்கி உண்டு, வினோத வழிபாட்டை, மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அமுதப் படையல். அன்னதானம் நடைபெற்றது .இதில் ஏராளமான பெண்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.