குத்தாலம் பேரூர் அளவில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டமும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியும் துவக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் அளவில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கு.வைத்தியதாதன் தலைமையில்,பேரூர் திமுக செயலாளர் எம்.சம்சுதின்,மதிமுக ஒன்றிய செயலாளர் வாசு,பேரூர் செயலாளர் கருணாநிதி,இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜெயபால்,ஆதி’தமிழக விவசாயத் தொழிலாளர்கள் கட்சியின் பேரூர் செயலாளர் சிவகுமார்,காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனி தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி உடன் அனைத்து நிர்வாகிகளுடன் சென்று தோப்பத்தெரு பகுதியில் வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் பணி துவக்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர் அணி மாணவர் அணி உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.