குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கோவிலில் இருந்து கடந்த 24ஆம் தேதி காளியம்மன் திருநடன உற்சவமனது தொடங்கி 9 நாளான நேற்று காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் பந்தல் காட்சி திருநடன உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
இன்று பத்தாம் நாள் மகா காளியம்மனுக்கு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளியம்மன் கோவில் தெருவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.