BREAKING NEWS

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது.இதற்கு குத்தாலம் தாலுக்கா வட்டாச்சியர் சித்ரா தலைமையில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர்.

தமிழக அரசின் உத்தரவு பேரிலும் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜமாபந்தி எனும் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது,100 நாள் வேலை சம்பள பாக்கி,கல்வி உதவி தொகை, . ஓய்வூதியர் தொகை,மகளிருக்கான ரூ- 1000 உரிமை தொகை,என 107 மனுக்கள் பெறப்பட்டது.இதனடிப்படையில், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோட்டாச்சியர் யுரேகா உத்திரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் குத்தாலம் வருவாய் நிருவாக அலுவலர் பாலமுருகன்,கலந்து கொண்ட அதிகாரிகளுக்கும் மற்றும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில்,200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS