குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முற்றுகை பொது மக்கள் போராட்டம்.
நீலகிரி குன்னூர் இந்திரா நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபடமுயன்ற நூற்றுகணக்கான பொது மக்கள் தடுக்கப்பட்டனர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாரை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம்.
குன்னூர் அருகே இந்திரா நகரில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 50 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பெண்கள் கழிப்பறை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், பள்ளி மாணவ மாணவியர் சென்று வர முறையான நடைபாதை வசதியில்லாமல் இருப்பதாலும் தடுப்பு சுவர் இல்லாததால் ஆபத்தான நிலையில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறி இன்று குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர் இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் ஆணையர் ஆகியோரை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதனைத் தொடர்ந்து இந்திரா நகர் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் பல லட்ச ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என கூறிவரும் குன்னூர் நகராட்சி தலைவர் சீலா கேத்ரின் மற்ற பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்