BREAKING NEWS

குன்னூர் ஒய்எம்சிஏ அருகே சிறுவர்களுக்கான கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய் எம் சி ஏ அருகே உள்ள தனியார் அரங்கில் சிறுவர்களுக்கான வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மற்றும் mounto shito Ryu கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய்எம்சி அரங்கில் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மற்றும் mounto shito Ryu சார்பாக நடத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு போட்டிகள் நடைபெற்றது இதில் ஏராளமான கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர் இதில் ஐந்து நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வளரி ஆசான் காமராஜ் மாஸ்டர் ஆசியுடன் , கருணாகரன் 5th Dan black belt மற்றும் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பின் நீலகிரி மாவட்டம் கராத்தே பயிற்சியாளர் உமாசங்கர் இவர்கள் நடுவராக பங்கேற்று மாணவர்களைை தேர்வு செய்தனர்.

மேலும் இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் உ.நெடுமாறன் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் கி இளவரசன் வந்திருந்து பயிற்சி பெற்று வரும் மாணவ செல்வங்களை வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் பயிற்சி பெற்று வரும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு நீலகிரி மாவட்டம் மற்றும் mounto shito Ryu கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

https://youtu.be/jrJRXdwHRyk

CATEGORIES