குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில், அபெக்ஸ் சர்வேதேச சங்கம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை, மற்றும் அறிவியல், மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி,
முன்னாள் சர்வதேச அபெக்ஸ் சங்க தலைவர், கல்லூரி தாளாளர் மதிவாணன் பங்கேற்று, பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான எழுதும் மேஜைகள், டேபிள்கள், சேர்கள், இரு கணினிகள் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.
இதில் கலந்துகொண்ட குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசுகையில்
அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு, பர்னிச்சர்கள், கணினிகள், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்பதால்தான், 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இருந்த இடத்தில், தற்போது 70 மாணாக்கர்கள் மட்டும் கல்வி பயில வருவதாக தலைமையாசிரியை சுகந்தி கூறினார்.
வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து கோரிக்கை வைத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், காலை உணவு உள்ளிட்ட, அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் கிடைக்க
நடவடிக்கை மேற்கொள்வேன். என்று தெரிவித்தார்.https://youtu.be/DXHQ7YHxa6k