BREAKING NEWS

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-தாவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி. ஆனந்த் அவர்களுக்கு பள்ளிப்பாளையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு, முதியோருக்கு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, கட்டிட தொழிலாளர்களுக்கு என பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும்,ஏழைத் தாய்மார்களுக்கு சேலை,அரிசி,
அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கணவனை இழந்து தவிக்கும் கைம் பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் அழகு நிலைய நடத்தி வரும் பெண்ணிற்கு அழகு சாதன பொருட்களும் , மாதம் தோறும் முதியோருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS