குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஷர்மிளா (23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின் விளைவாக ஷர்மிளா கோபித்துக் கொண்டு பெரமண்டூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
CATEGORIES விழுப்புரம்
TAGS மாவட்ட செய்திகள்