குவைத் நாட்டில் கொத்தடிமையாக தண்ணீர் உணவு இன்றி இளைஞர் தவிப்பு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சியைச் சேர்ந்த இரகுபதி த/பெ வேலாயுதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அரபு நாடான குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்காக ஏஜென்ட் மூலமாக சுற்றுலா விசாவில் சென்றுள்ளார்,
அப்போது அங்கு சென்ற பிறகு இவர் எதிர்பார்த்த அந்த ஓட்டுனர் வேலையை கொடுக்காமல், அவருக்கு வேலை வழங்கியவர் வீட்டு வேலை செய்ய சொல்லியும், கழிவறை கழுவச் சொல்லியும் மற்ற பிற வேலைகளை செய்ய சொல்லியும் கொத்தடிமையாக நடத்தியுள்ளனர் குறிப்பாக உணவு குடிநீர் கூட சரிவர கொடுக்காமல் இவரைக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே பாதிக்கப்பட்ட ரகுபதி மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும், உணவு தண்ணீர் அருந்தி நான்கு நாட்கள் ஆகிறது என்றும் என்னை மீட்டு தாயகம் அழைத்துச் செல்லும்படி மத்திய மாநில அரசுகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை அளிப்பது போன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.