குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் உருவ பொம்மையை, கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ள நிலையில், நடிகையும், தேசிய மகளிர. ஆணைய உறுப்பினராக உள்ள குஷ்பு, இந்த திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த இரு நாட்களுக்கு முன் பேசி இருந்தார்.
குஷ்புவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்டித்து கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் திரண்ட திதுகவினர், குஷ்புவின் உருவ சிலையை எடுத்துச்சென்று அண்ணா சிலை முன்பு உருவ பொம்மையை எரித்தும், குஷ்புவிற்கு எதிராக முழக்கமிட்டும், தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுப்பதற்குள் உருவ பொம்மையை எரித்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.