BREAKING NEWS

கூடநகரம் ஶ்ரீமாரியம்மன் கோயிலில் 29ம் ஆண்டு 3ம் ஆடி வெள்ளி திருவிழா!


வேலூர், ஆக.4-
குடியாத்தம் தாலுகா, கூடநகரம் மதுரா, பார்வதியாபுரம் கிராமம் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 29 ஆம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா!
வேலூர், ஆக.4-
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா 29 ஆம் ஆண்டு 3ம் ஆடி வெள்ளி திருவிழா அம்மனுக்கு பாலபிஷேகம் வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து பொங்கலிட்டு கூழ் ஊற்றி தேங்காய் உடைத்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து அம்மனுக்கு சிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இத் திருவிழாவில் ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டாண்மை மகேந்திரன், தர்மகர்த்தா ஜி. கோவிந்தசாமி, மேட்டுக்குடி எம். தரணி, கோயில் நிர்வாகி கே .பாஸ்கர் ,செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சதீஷ்குமார், கோயில் பூசாரி சி. குப்புசாமி, ஸ்ரீ சக்தி இன்பா, திரு வெற்றி நகர் பாலாஜி, எஸ்.மூர்த்தி முன்னிலையில் வெகு சிறப்பாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இத் திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பி .கே. குமரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி. வெங்கடேசன்,1வது வார்டு உறுப்பினர் ஜே. வித்யா ஜெயராம், கிராம நிர்வாக அலுவலர் டி.பி. ருத்ரவேல், ஊராட்சி செயலாளர் வி. ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர்.கடந்த 02.08.2024, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல், மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு 8 மணிக்கு வான வேடிக்கை, இரவு 11 மணிக்கு அம்மன் தேர் ஊர்வலம், மறுநாள் நாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா என ஊர் பொதுமக்கள், இளைஞரணிகள் முன்னிலையில் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS