கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மட்டுமின்றி அனைத்து வனப்பகுதிகளும் மழை பெய்து பசுமையாக காணப்படுகிறது.
இந்த நிலையில் சாலை ஓரங்களில் வனவிலங்குகளும் காண முடிவதால் இந்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மசினகுடி பகுதியில் இருந்து இன்று காலை சிங்காரா கிராமப் பகுதிக்கு உள்ளூர் வாசிகள் பல்வேறு பணிகளுக்காக வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது சாலை ஓரத்தில் மிகப்பெரிய வடிவிலான பிரம்மாண்ட புலி ஒன்று நடந்து வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ந்து போன வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திய நிலையில் மின்னல் வேகத்தில் சாலையைக் கடந்து சென்றது
TAGS நீலகிரிநீலகிரி கூடலூர்நீலகிரி மாவட்டச் செய்திகள்நீலகிரி மாவட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூர்மாவட்டச் செய்திகள்