கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கூடலூரில் எம் எல் ஏ பொன்.ஜெயசீலன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. அதிமுக ஒன்றிய செயலாளர் பத்மநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல், தலைமை கழக பேச்சாளர் ராமமூர்த்தி, வியாபாரி சங்க செயலாளர் ரசாக், பாதுஷா, நாம் தமிழர் கட்சி கேதீஸ்வரன், அமமுக தம்பி ராமசாமி, தையல் கலைஞர் சங்க முஜீப் ரகுமான், எஸ் என் டி பி பிந்துராஜ், எஸ்.டி.பி.ஐ. பிரோஸ், நீலகிரி தொகுதி மக்கள் இயக்க தலைவர் எஸ் கே ராஜ், சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி ஆனந்தராஜ், சமூக ஆர்வலர் ராஜேந்திரன், உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்எல்ஏ ஜெயசீலன் கூறும்போது, யானை வழித்தட அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இதைக் கண்டித்து கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 13-ம் தேதி அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என அறிவித்தார். இதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
மேலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் யானை வழித்தட வரைவு அறிக்கையை திரும்ப பெறவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.