கெவிப்பாறா பகுதியில் காபி தோட்டத்தில் குட்டிகளுடன் புலி உலவுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன.
இதில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தனியாா் காபி தோட்டத்தில் இரண்டு குட்டிகளுடன் புலி உலவுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். குட்டிகளுடன் புலி உள்ளதால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை வந்துவிடாமல் தடுப்பதோடு, அடா்ந்து வனத்துக்குள் கொண்டு சென்று விட வனத் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
CATEGORIES நீலகிரி
TAGS மாவட்ட செய்திகள்