BREAKING NEWS

கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!

கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!

திமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர், கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெசுராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நிகழ்வில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட செயலாளர் ரெசுராஜ், மண்டல செயலாளர் அஜ்மல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வக்கொடி ராஜா மணி, மாவட்ட தொண்டர் அணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், கடையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட் , முன்னாள் ஆனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலீல் ரகுமான் ,முன்னாள் குலைய நேரி ஒன்றிய கவுன்சிலர் திருமலை குமார், ஆண்டிபட்டி காலனி ஒன்றிய பிரதிநிதி தங்கராஜ் ,சின்னவர் நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருகிற ஜூன் 1ம் தேதி கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை புனலூரில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன், தமிழ்நாடு முதல்வர் சின்னவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பொறித்த அட்டையுடன் கூடியது ஐந்தாயிரம் நோட்டு புத்தகம் ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Share this…

CATEGORIES
TAGS