கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு
அங்குள்ள 3 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரம் சாலியாற்றில் மிதந்து வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் 60 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர். சாலியாற்றில் 60பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 26 பேரின் உடல்கள் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் உடல்கள் தலை, கை, கால்கள் துண்டாகி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.
CATEGORIES கேரளா