கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும் என்றார், என்ற இயேசு நாதரின் பாடலை பாடி வேலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான்
வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் நாள்தோறும் விதவிதமாக தனது பாணியில் பிரச்சாரம் மக்களை கவர்ந்து வருகிறார்
இதனை அடுத்து ஈஸ்டர் தினமான இன்று வேலூரின் மையப்பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் கிறிஸ்தவர்களோடு கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்
இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் வெளியே பலூன் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து கைபம்பை வாங்கி பலூனுக்கு காற்றடித்தும், தமக்கு வழங்கப்பட்ட சின்னமான பலாப்பழத்தை தலையில் வைத்தும் தமாஷ் செய்துக்கொண்டிருந்தார்.
மேலும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு பலாப்பழம் வாங்கலையோ பலப்பாழம், விறகு வாங்கலையோ விறகு என்றும் அதே போல் ஒரு கைக்குழந்தையை அலேக்காக தூக்கி என தன்பானியில் அட்ராசிட்டி காட்டினார்
பின்னர் தேவாலயத்தின் வெளியே நிற்கவைக்கப்பட்டிருந்த அவரது பிரச்சார வேனில் ஏறிக்கொண்டு “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும் என்றார், இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்” என்று இயேசு நாதரின் பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.
இவருடன் அங்கிருந்து ஆண்கள் பெண்கள் என அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.