கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் டிசம்பர் மாதம் தொடங்குகிறது
கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இந்த படம் வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார். நடிகர் ராணா டக்குபதி, இதில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் கே.ஜி.எஃப் 3 படம் இந்த வருட இறுதியில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் பிரசாந்த் நீல், இப்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் நிறைவடைகிறது. டிசம்பர் மாதம் கே.ஜி.எஃப் 3 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.