BREAKING NEWS

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 வரை செயல்பாட்டில் இருக்கும் என உச்சநீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ,கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து இன்று முதல் கட்டமாக 800க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இ பாஸ் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதில் கொடைக்கானல் சுங்க சாவடி நுழைவதற்கு முன்னர் அனைத்து வாகனத்திலும் உள்ளூர் மற்றும் மற்ற சுற்றுலா பயணிகள் இ பாஸ் உள்ளதா? என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் . உள்ளூர் வாகனங்களுக்கு ஒரு முறை பதிவு செய்தால் 30 நாட்கள் வரை செல்லுபடி ஆகும் என்பதையும் தெரிவித்து அவர்களுடைய வாகனத்தில் எண்ணை பதிவு செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை வரவேற்புடன் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS