கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கொடி கட்டி பறக்கும் காளான் கஞ்சா போதை வஸ்துக்கள் விற்பனை தடுக்குவதற்காக டிஎஸ்பி மதுமதி தலைமையில், கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், சார்பாய்வாளர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர் நட்சத்திர ஏரி சாலை, நாயுடுபுரம் டிப்போ மற்றும் அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் காளான் மற்றும் கஞ்சா விற்பனை மறைமுகமாக உள்ளதா என்ற கோணத்தில் சோதனையில் ஈடுபட்டனர் , சந்தேகம் படும் வகையில் வந்த வாகனங்கள் , சுற்றுலா வழிகாட்டிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கொடைக்கானல் நுழைவாயில் பகுதிகளில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் கஞ்சான் காளான் வேண்டும் என்று கேட்டாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஒரு லட்சம் அபராதமும் 10 வருட சிறை தண்டனையும் வாங்கி தரப்படும் என்று டி எஸ் பி மதுமதி கூறியுள்ளார்..
மேலும் கடந்த மாதங்களாகவே இருபதுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் காளான் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கும் விடுதிகளில் காளான் கஞ்சா விற்பனை செய்தால் வங்கி கணக்கு முடக்கப்படும் ஹோட்டல் உரிமம் போன்றவைகள் உடனடியாக ரத்து செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.