BREAKING NEWS

கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றம்.

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி கிராமம் உள்ளது அப்பகுதியில் உட்கிராமமாக கல்பகனூர், ராசிநகர், ராமமூர்த்தி நகர், சிவகங்கைபுரம், இராமநாய்க்கன்பாளையம், புதுகொத்தாம்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இந்த கிராமப்புற பகுதியிலிருந்து வெளியூருக்கு செல்ல முக்கிய பகுதியாக கொத்தாம்பாடி அமைந்துள்ளது.

இங்கு உள் கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும் போதும் விபத்து ஏற்பட்டு அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த விபத்தினை தடுக்கும் வகையில் அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. இதனால் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் திமுக ,அதிமுக, தேமுதிக விசிக அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் , பேருந்து நிறுத்தம் சர்வீஸ் சாலை மற்றும் குற்றச்சாட்டுக்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமாராவை பொருத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நான்கு ஊராட்சிமன்ற தலைவர்களை அழைப்பு விடுத்து நெடுஞ்சாலை அதிகாரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கே பி எஸ் ராஜா துணைத் தலைவர் இளையராஜா ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராணி தேசிங்கு,
வார்டு உறுப்பினர்கள் சதீஸ் என்ற சத்யராஜ் சிலம்பரசன் அலமேலு முருகன் திமுக நிர்வாகிகள் சுப்பிரமணி பழனிசாமி . பாமகவினர் சிவபெருமாள் இளங்கோ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் வெற்றிச்செல்வன் ரமேஷ். தேமுதிக நிர்வாகிகள் அழகேசன் ரவி மற்றும் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS