கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.
இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பாத்தி மட்டம் கிராமம் இந்த கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே அன்றாட கூலி தொழிலாளர்கள் இவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மயானம் வசதி, எரியாத தெரு விளக்குகள் மேலும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் ,பஸ் ஸ்டாண்ட் முறைகேடு நடந்துள்ளதாகவும்,
தெரிவித்தனர் பஞ்சாயத்து உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுவாகவும் அறிக்கை மூலமாகவும் நேரில் சென்று முறையிட்டும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை இத்தனைக்கும் நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இனியும் விடியாத கிராமமாக உள்ளது எங்கள் பாத்தி மட்டம் கிராமம், எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி மக்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகளை செய்து தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.