BREAKING NEWS

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!

வீட்டுப் பாடம் செய்யாததால் மொட்டை மாடி வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி தண்டனை வழங்கிய தாய் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கொளுத்தும் வெயிலில் தனது 5 வயது பெண் குழந்தைக்கு தாய் ஒருவர் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை தந்துள்ளது. வீட்டுப் பாடம் செய்யாத அந்த குழந்தையின் கை, கால்களைக் கட்டி கொளுத்தும் மொட்டை மாடி வெயிலில் போட்டுள்ளார். இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்த ஒருவர், சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 25 நிமிடங்களாக வெயிலின் கொடுமை தாங்காமல் கதறும் அந்த குழந்தையின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2-ம் தேதி டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததை போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். குழந்தையை துன்புறுத்திய தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )