BREAKING NEWS

கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

கோடை  விடுமுறையில்  உள்ள பள்ளி  மாணவர்களின்   பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட  ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்லும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பாதுகாப்பற்ற அபாயகரமான நீர்நிலைகளின் கரையோரங்களில் நின்றுகொண்டு பொதுமக்கள் ‘செல்பி” (selfie) எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.

குறிப்பாக நீர்நிலைகளில் பள்ளி மாணவர்கள் / குழந்தைகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ நீர்நிலைகளில் இறங்க அனுமதிக்கக்கூடாது எனவும் கோடை காலத்தில் இடிமின்னலுடன் வரும் மழையின்போது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share this…

CATEGORIES
TAGS