கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்க் கொண்டார்.இந்த ஆய்வின் போது முதலாவதாக கோடநாடு பகுதியில் உள்ள தோடர் இன மக்கள் வாழும் கோடுதேன் மந்து மற்றும் நேர்தேன் மந்து பகுதிகளுக்கு வனப்பகுதி கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைக்க வழங்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில் இரண்டு பழங்குடியின கிராமங்களுக்கு விரைவில் சாலைகள் அமைக்க நேரில் ஆய்வு மேற்க் கொண்டார்.
பின்னர் குயின்சோலை பகுதியில் உள்ள டேன் டீ தொழிற்சாலைக்கு சென்று அங்கு தயாரிக்கப்படும் தேயிலை தூளின் தரம்,தேயிலை தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை உபகரணங்கள் மற்றும் இங்கு தயாரிக்கப்படும் தேயிலை தூளின் ரகங்கள் பற்றி ஆய்வு மேற்க் கொண்டார்.பின்பு டேன் டீ தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரில் சந்தித்தார்..
அப்போது டேன் டீ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு பணியின் போது ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா,அவர்களின் குடியிருப்புகளில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளதா என கேட்டறிந்தார்.இதில் டேன் டீ தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்,படி மற்றும் போனஸ் உயர்வு குறித்து வனத்துறை அமைச்சரிடம் டேன் டீ தொழிலாளர்கள் கூறும் போது உங்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ்,மாவட்ட வன அலுவலர் கௌதம், நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் மற்றும் டேன் டீ அலுவலர்கள் உடன் இருந்தனர்.