கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் ஈச்சர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது,
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில் கோபி – அத்தாணி சாலையில் திருகிணி பாலம் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்
அப்போது அந்த வழியாக வந்த வாழைக்காய் ஏற்றி வந்த ஈச்சர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஈச்சர் லாரி ஓட்டுனரிடம் உரிய ஆவணங்கள் இன்றி 1,13,200 ரூபாய் ரூபாய் இருப்பது தெரியவந்தது,
அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓட்டுநர் கோபி அளுக்குளி அம்மன் நகரை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது
பின்னர் அவர் சரக்கு லாரியில் எடுத்துவரப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்து கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்