BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, ஸ்ரீ விநாயகர் பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்த்து பூஜை, காப்பு கட்டுதல், திரவிய ஹோமம், மூல மந்திர ஹோமம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வாக மகா கும்பாபிஷேகம் விழா கொண்டாடப்பட்டது, இதனையொட்டி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் புனித நீரை எடுத்து திருக்கோவிலில் வலம் வந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது,

பின்னர் கற்பூர ஆராதனை காட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, இந்த கும்பாபிஷேக விழாவில் நம்பியூர் கொளப்பலூர் சிறுவலூர் குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Share this…

CATEGORIES
TAGS