BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணம் இல்லாமல் 1,16,500 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் கோபியை சேர்ந்த மாட்டு வியாபாரி மூர்த்தி என்பதும், மாடு விற்ற பணத்தை கொண்டு செல்லும் போது பிடிபட்டதும் தெரியவந்துள்ளது,

அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் கோபி தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS