கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் பெயரில் மொடச்சூர் பகுதியில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது கவின் கார்டன் பகுதியில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது
அதனைத் தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 75 ஆயிரம் மதிப்புள்ள 756 மது பாட்டில்களை கோபி மதுவிலக்கு டி.எஸ். பி சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த கவின் கார்டன் பகுதியைச் சேர்ந்த குபேந்திரபிரபு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் குபேந்ர பிரபு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது
தொடர்ந்து குபேந்திரபிரபுவை கைது செய்த மதுவிலக்கு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.