BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர்.

 

அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

 

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

 

அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அணையின் கீழ் பகுதியில் கடற்கரை போன்ற மணல் பகுதியில் அமர்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் சுவையான மீன் வகையை சாப்பிட்டும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் விளையாடியும் உற்சாகமாக விடுமுறையை கழித்தனர்.

 

கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்க்காக பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS