கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மந்தித்தோப்பு சாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரைக் கண்ட போலீஸார் அங்கு சென்று காரை அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவர் திருநெல்வேலி கரையிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்.
அவரிடமிருந்து சுமார் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
TAGS thoothukudituticorintuticorin district newsகோவில்பட்டிதூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்மாவட்ட செய்திகள்