கோவில்பட்டியில் நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் கல்வி கண் திறந்த காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா – பள்ளிக் குழந்தைகள் காமராஜர் வேடமடைந்து வந்து மரியாதை செலுத்தினர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜரின் 120 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளி மற்றும் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில்,

நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் தலைமையில் நாடார் நடுநிலைப்பள்ளி பள்ளி செயலாளர் கண்ணன்,வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் முன்னிலையில் பள்ளி குழந்தைகள் காமராஜர் வேடமிட்டு பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அவரது திருஉருவ சிலைக்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் அப்பள்ளி குழந்தைகள் காமராஜர் வாழ்க்கை முறை குறித்தும் அவர் செய்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS தமிழ்நாடு
