BREAKING NEWS

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன் 3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன் 3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன்3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த மாதம் 24ந்தேதி முதல் அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன.

லீக், காலிறுதி , அரை இறுதி என்று கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி நடைபெற்றது. போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது*

2வது இடத்தை புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி பெற்றது.முன்னதாக 3,4 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதின.

இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு
அதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதேபோன்று இரண்டு ,3,4ம் பிடித்த அணிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. காலியிறுதி போட்டி வரை தகுதி பெற்ற நான்கு அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் சராஜூ,, கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

CATEGORIES
TAGS