கிராம நிர்வாக அலுவலர் மீது அவதூறு செய்தி பரப்புவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அபிராம சுந்தரி இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முதல் தற்போது வரை அக் கிராமத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத் தலைவர் அன்புராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலர் செயல்பாடுகள் குறித்து எந்தவித ஆதாரமின்றி அவதூறு செய்தி பரப்பி வருவதாக கூறி வானரமுட்டி சேர்ந்த கிராம மக்கள் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் அவதூறு பரப்பிய அன்புராஜ் நடத்தி வரும் அமைப்பின் பதிவு என்னை ரத்து செய்ய வேண்டும் அவர் மீது சட்டப்படி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.