BREAKING NEWS

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் லாரி மோதி நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த திருமால் நாடார் மகன் நாராயணசாமி (62) இவர் கயத்தாறு, கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்திலேயே சென்று பதநீர் மற்றும் நுங்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் எட்டையபுரத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு கோவில்பட்டி வழியாக சேர்ந்தமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நாலாட்டின் புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம், செக்காலிவலையைச் சேர்ந்த சுரேந்திரன் மகன் சச்சின் (24) லாரி ஓடுனரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS