BREAKING NEWS

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிவணனைந்தபுரம் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஞான பீடத்தில் குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இன்று பெயர்ச்சி ஆகிறார்.

இதையொட்டி சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை மஹா சங்கல்பம் புண்யாகவாஜனம் கும்ப பூஜை சூக்தாதி பாராயணங்கள் தொடர்ந்து ஸ்ரீ குரு பகவான் மூல மந்திர ஹோமம் நவகிரக ஹோமம் நடைபெற்றது
பின்னர் பூர்ணாஹுதி தீபா ஆராதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து குரு பகவானுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இந்த சிறப்புமிக்க குரு பெயர்ச்சி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS