கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ ஸ்ரீ பூவனநாத சாமி திருக்கோவில் பிரதோஷ விழா நடைபெற்றது.இன்று மாலை தொடர்ந்து கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால்,தேன், விபூதி,பன்னீர்,சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூவனநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
