BREAKING NEWS

கோவையின் இரண்டாவது பெண் மேயராக பதவியேற்ற ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் .

 

 

கோவையின் இரண்டாவது பெண் மேயராக இன்று பதவியேற்றுக் கொண்ட ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மற்றும் முத்துசாமி

 

கோவையின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை குறைபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இன்று கோவையின் இரண்டாவது பெண் மேயராக ரங்கநாயகி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இன்று தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் அதற்கான கோப்புகளில் கையேழுத்து இட்டு கோவையின் இரண்டாவது பெண் மேயராக பதவியேற்று கொண்டார்.
தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கநாயகி கூறியதாவது..
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளதாக அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் கூறினார்.
தன்னை மேயராக ஆக்கிய திமுக கழகத்திற்கு அயராது பாடுபடுவேன் எனவும், கோவையின் தேவைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து, உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்ய பாடுபடுவேன் என்றார், தற்பொழுது வரை தன்னுடைய வார்டு பகுதிகள் உள்ள குறைகளை மட்டும் கேட்டிருந்த நான் இனி கோவை மாநகர் முழுவதும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து அவற்றை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது..
மாநகராட்சி பணியை சிறப்பாக செயல்படுவதற்கு நாங்கள் துணையாக இருப்போம்.
கோவைக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
300 கோடி ரூபாய்க்கு மேல் சாலை பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பில்லூர் குடிநீர் திட்டம், 24 மணி நேரம் குடிநீர் கொடுக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்துள்ளனர் அதனையும் முதலமைச்சரிடம் கேட்டு விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
சிறுவாணி அணையில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும் என கேரளா அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆழியார் அணைகள் உள்ளிட்டவை குறித்து நீர்வளத் துறையினர் கேரளா அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ஒரு சில கவுன்சிலர்கள் அழுது கொண்டே போவது குறித்த கேள்விக்கு இதெல்லாம் ஒரு பேச்சா என தெரிவித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்த கேள்விக்கு, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் கே என்.நேரு தெரிவித்தபடி விடைபெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS