கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது.
கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது.
ட்ரீம் சோன் பள்ளி கோவையில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.. பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் ஆடை வடிவமைப்புத் துறையில் உலகெங்கிலும் சிறந்த விளங்கி வருகின்றனர்.. பல மாணவர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருப்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை திறமையை வெளி உலகத்துக்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பேஷன் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான “கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் சீசன் 5” கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வடிவமைத்த ஆடைகளை அணிந்து இந்தியாவின் தலைசிறந்த 21 மாடல்கள் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இது குறித்து ட்ரீம் ஜோன் கீழ பள்ளியின் உரிமையாளர் கணபதி கூறுகையில், தொடர்ந்து ஐந்து வருடங்களாக, மாணவர்களின் தனி திறமையை வெளிக்காட்டும் வகையில் அவர்கள் வடிவமைத்த ஆடைகளை காட்சிப்படுத்தும் வகையில் இந்த பேஷன் ஷோ நடைபெறுகிறது.. திருமணம் மற்றும் வரவேற்புக்கு என சிறப்பான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பல்வேறு மாணவர்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறி உள்ளனர். ஆடை வடிவமைப்பு துறை தற்பொழுது வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்களுக்கு இதில் நல்ல எதிர்காலம் உண்டு என்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள், உட்பட சுமார் 1500 பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டு, மாணவர்களின் திறமையை பாராட்டியதாக தெரிவித்தார்.