கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டிகளில் பல்வேறு நடனங்களை ஆடி அசத்திய மாணவ, மாணவியர்கள்…
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் சார்பாக மூன்றாவது, மாவட்ட அளவிலான நடன போட்டியின், தகுதி சுற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளானது தனி நடனம், ஜோடி நடனம், மற்றும் குழு நடனம் என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதனை கல்லூரியின் முதல்வர், முனைவர் நாகராஜன் குத்துவிக்கேற்றி துவக்கி வைத்ததுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மற்றும் குழுவினர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இது குறித்து கல்லூரியின் முதல்வர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,.. கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் ஜேகே நர்சிங் கல்லூரி இணைந்து சமூக நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றதாகவும்.
இதில் மாணவர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் வகையில் சிறப்பு மிக்க பல்வேறு நிகழ்ச்சிகளான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பயன்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், அறிவியல் கன்காட்சி, மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றதாகவும்,
இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் நடன போட்டிகளை நடத்தியதாகவும் இதில் பல்வேறு மாணவர்கள் தங்களது திறன்களை வெளிபடுத்தி உள்ளதாக கூறினார். இதற்காக முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் அமைப்பினருடன் இனைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில், முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனர் அபிநயகுமார், கேஎஸ்ஜி கல்லூரியின் முனைவர் ராஜா, பேராசிரியர்கள் பிரசிதன், சுகேந்திரன், நாகராஜன், மற்றும் விழா விழா ஏற்பாட்டாளர்கள் நாகராஜ், சங்கர், ஹெமலதா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.