கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஸ்டேட் லெவல் யோகாசனம் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் நாயர்ஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் இன்று ஆத்மா யோகா மையம், மற்றும் நான்முகனார் திருவள்ளுவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
வயது வாரியாக நடத்த பட்ட இந்த போட்டிகளில் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் சக்ராசனம், தனுராசனம், பத்மாசனம், உத்ராசனம், கர்பாசனம், உள்பட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். இதில் நடுவர்களாக நான்முகனார் திருவள்ளுவர் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, நான்முகனார் திருவள்ளுவர் அறக்கட்டளையின் பொருளாளர் பிரதீப், பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் ஜமேஷா, துணை ஆசிரியர் ராபினா பர்கத், குங்பு மாஸ்டர் நரேஷ் கிருஷ்ணா, ஆகியோர் பங்காற்றினர்.
இதில் சிறப்பாக பல்வேறு ஆசனங்களை செய்து அசத்திய மாணவ மாணவியர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கபட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசு கூறுகையில்,..
இன்றைய தலைமுறையினர் அதிகமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது அதீக ஆர்வம் காட்டி வருகின்றனர், இது முற்றிலும் மாற்ற பட வேண்டிய ஒன்றுவாக உள்ளது. இதனை மாற்ற இளம் தலைமுறையினரிடம் இருந்து வரவேண்டும் என்பதை இது மாதிரியான யோகாசன பயிற்சி மூலமாகவும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.