கோவை பந்தயசாலை பகுதியல் உள்ள தாஜ் உணவகத்தில், ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் பிரபலமான முன்னனி நகைகடையினர் தங்களது அரங்குகளை காட்சிப்படுத்தினர்
கோவை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சியான ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தாஜ் உணவகத்தில் இன்று துவங்கபட்டது.
ஜுன் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் கைவினை கலைஞர்களின் நகை வடிவமைப்புகள், இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட நகைகள் என பல்வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தி உள்ளனர்.
இதனை பேஷன் டிசைனர் மற்றும் நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு, ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ் மேத்தா ஆகியோர் குத்துவிக்கேற்றி வைத்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து இங்கு காட்சி படுத்த பட்டுள்ள, நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள் குறித்து ஸ்டால் மேற்பார்வையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மேலும், ஆன்டிக், அரிதான கல்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளதையும் கண்டு ரசித்தனர்.
ஆசியா நகை கண்காட்சியில் இந்த ஆண்டு, பெங்களுரு, மும்பை, டில்லி, ஜெய்ப்புர், ஐதராபாத் மற்றும் கோவையை சேர்ந்த பல முண்ணனி நகை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.