கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக வரவேற்பு விழா கல்லூரியின் பொண்விழா அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர் கேசெவினோ அறம் கலந்து கொண்டு முதன் முதலாக கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு கல்லூரி வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி மாணவிகளை வரவேற்று பேசினார்.
இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் ஹாரத்தி இக்கல்லூரியின் சிறப்புகள் குறித்தும், கல்லூரியின் சாதனைகள், குறித்தும் விளக்க உரையாற்றினார். இதனை தொடர்ந்து இக்கல்லூரியில் பயின்ற இரண்டு மாணவிகளான கீதா, மற்றும் பிரியா ஆகியோர் தங்களது கல்லூரி அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளை வரவேற்கும் விதமாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும் பாடகியுமான சாருமதி முரளிதரன் தன்னை செம்மை படுத்திய கல்லூரி வாழ்க்கை குறித்து மாணவிகளிடம் பேசினார். மேலும் மாணவிகளுக்காக சிறப்பு பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார்.
மேலும் கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் பயத்தை நீக்கும் வகையில் கல்லூரியின் பொருளாதாரவியல் மாணவி பார்வதி பிள்ளை மாணவிகளின் கல்லூரி அச்சத்தை நீக்கும் வகையில் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பால விஜயலட்சுமி உள்ளிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.